சென்னை முழுவதும் போக்குவரத்து காவல்துறையினர் வாகனங்களில் நம்பர் பிளேட் சோதனை செய்து வருகிறார்கள். நேற்று முதல் நம்பர் பிளேட் சோதனை நடைபெற்று வரும் நிலையில், மெரினா கடற்கரை, ரயில்வே நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போக்குவரத்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதன் பிறகு மோட்டார் வாகன சட்டத்தின் படி நம்பர் பிளேட்டுகளில் கலை அல்லது படங்கள் மற்றும் ஆடம்பர எழுத்துக்கள் போன்றவற்றை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதோடு நம்பர் பிளேட்டுகளுக்கும் ஒரு அளவு கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் பல வாகன ஓட்டிகள் இதை பின்பற்றாமல் தங்கள் இஷ்டம்போல் நம்பர் பிளேட்டுகளை வைத்துக் கொள்கிறார்கள். இந்நிலையில் முறையான நம்பர் பிளேட் வைக்காத வாகன ஓட்டிகளுக்கு போலீசார் 500 ரூபாய் அபராதம் விதிப்பதோடு தொடர்ந்து அந்த தவறை செய்வது தெரிய வந்தால் 1500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்து வருகின்றனர். மேலும் நம்பர் பிளேட் சரியாக இல்லாத வாகன ஓட்டிகளிடம் போலீசார் அபராத தொகையை விதிப்பதோடு திருத்தப்பட்ட நம்பர் பிளேட்டின் புகைப்படங்களை 7871845566 என்ற வாட்ஸ் அப் நம்பருக்கும், [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்ப வேண்டும் எனவும் போலீசார் அறிவுறுத்தி வருகிறார்கள் .