சென்னை- பெங்களூர் மற்றும் திருப்பதி அல்லது மும்பை செல்லும் ரயில்கள் அடுத்த மாதம் முதல் கூடுதல் வேகத்தில் இயங்கப்பட உள்ளது. இந்த வழித்தடங்களில் மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் சென்னை- ஜோலார்பேட்டை பாதையில் ரயில்கள் இயக்க அனுமதி கிடைத்துள்ளது. அதேபோல் வந்தே பாரத் ரயில் சேவையும் கூடுதல் வேகத்தில் இயக்கப்படுகிறது. இதன் காரணமாக ரயில் பயணிகளுக்கு விரைவில் பயண நேரம் குறைய வாய்ப்புள்ளது.

பெங்களூருவை வந்தே பாரத் ரயில் 4.25 மணி நேரத்திலும், சதாப்தி ரயில் 4.45 மணி நேரத்திலும் சென்றடைகிறது. இந்த பயண நேரத்தில் விரைவில் அரை மணி நேரம் குறைந்து விடுகிறது. மேலும் தென்மேற்கு ரயில்வே மண்டலத்திற்கு உட்பட்ட ஜோலார்பேட்டை -பெங்களூர் வழிதடத்திலும் தண்டவாளங்கள் சரி செய்யப்பட்டு விட்டால் அதிகபட்ச வேகத்தில் இந்த தடத்திலும் ரயில்கள் இயக்க அனுமதி கிடைக்கும்போது இந்த பயண நேரம் குறைவதற்கான வாய்ப்பு உள்ளது.