கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 7-ம் தேதி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான இந்திய ஒற்றுமை நடைபயணம் தொடங்கப்பட்டது. 3500 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட இந்த நடைபயணம் பல்வேறு மாநிலங்கள் வழியாக மேற்கொள்ளப்பட்டது. இந்த நடைபயணம் கடந்த 13-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீருக்குள் நுழைந்தது. இந்நிலையில் ஸ்ரீநகரில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் இன்றுடன் இந்த ஒற்றுமை பயணம் நிறைவு பெற்றது.

 

இதன் நிறைவு விழாவில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் ராகுல் காந்தி தேசிய கொடி ஏற்றியுள்ளார். 136 நாட்கள் நடைபெற்ற இந்த நடைபயணம் வெற்றிகரமாக நிறைவடைந்ததை முன்னிட்டு அனைவரும் மகிழ்ச்சிகளை பகிர்ந்து கொண்டனர். அப்போது அருகில் இருந்து பிரியங்கா உடன் ராகுல் காந்தி பனிக்கட்டிகளை வீசி ஏறிந்து தன்னுடைய அன்பை வெளிப்படுத்தி உள்ளார். இந்த வீடியோவானது ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.