
சென்னையில் இருந்து நெல்லைக்கு ஏசி சொகுசு வகுப்பு கட்டணம் மற்றும் சேர் கார் கட்டணம் என இரண்டு வகையான கட்டணங்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி உணவு, ஜிஎஸ்டி மற்றும் முன்பதிவு என அனைத்தும் சேர்த்து ஏசி சொகுசு வகுப்பு கட்டணம் 3025 ரூபாயாகவும் ஷேர் கார் கட்டணம் 160 ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி மற்றும் சென்னை இடையே இயக்கப்பட உள்ள வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை செப்டம்பர் 24ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ள நிலையில் பயணிகள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருநெல்வேலியில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 1.50 மணிக்கு சென்னை வந்தடையும். மறு மார்க்கத்தில் சென்னையிலிருந்து பிற்பகல் 2.50 மணிக்கு புறப்பட்டு இரவு 10.40 மணிக்கு திருநெல்வேலி வந்து அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்களுக்கான கட்டணம் உள்ளிட்ட விவரங்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.