சென்னைக்கான இரண்டாவது பசுமை விமான நிலையத் திட்டத்தைப் பரந்தூரில் அமைக்கும் முடிவைக் கைவிடுவதாக முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் தமிழக அரசியல் மற்றும் தொழில் துறையில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. விவசாய நிலங்கள் மற்றும் நீர்நிலைகளைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், செயலக வட்டாரங்களில் பல்வேறு விதமான கருத்துகள் உலா வருகின்றன.
கடந்த காலங்களில் அரசியல் முரண்பாடுகள் காரணமாக திமுக அரசு கொண்டுவந்த மதுரவாயல் – சென்னை துறைமுகம் பறக்கும் மேம்பாலத் திட்டத்தை மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா முடக்கி வைத்ததைப் போல, தற்போது பரந்தூர் விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலானதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பரந்தூர் திட்டத்தை கைவிடுவது சென்னையின் எதிர்காலப் பொருளாதார வளர்ச்சியை வெகுவாகப் பாதிக்கும் என்றும், சர்வதேச சரக்கு போக்குவரத்து மற்றும் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் இரண்டாவது விமான நிலையம் மிக அவசியம் என்றும் நிதியமைச்சகம் மற்றும் தொழில் துறை செயலாளர்கள் அரசுக்கு விரிவான ஆலோசனைகளை வழங்கியதாக தெரிகிறது.
மேலும், பெங்களூர் மற்றும் ஹைதராபாத் நகரங்கள் நவீன உள்கட்டமைப்பில் வேகமான வளர்ச்சி அடைந்து வரும் வேளையில், இத்திட்டம் கைவிடப்பட்டால் தொழில் முதலீடுகள் அண்டை மாநிலங்களுக்குச் சென்றுவிடும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இருப்பினும், இந்த நுட்பமான ஆலோசனைகளைத் தாண்டி, தேர்தல் களத்தில் தான் அளித்த வாக்குறுதியையும் தனது அரசியல் செல்வாக்கையும் நிலைநிறுத்தும் நோக்கிலேயே முதலமைச்சர் விஜய் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
முந்தைய திமுக அரசால் திட்டமிடப்பட்டு மத்திய அரசின் கொள்கை அளவிலான அனுமதியைப் பெற்ற பரந்தூர் தளத்தை மாற்றினார், புதிய இடத்தைத் தேர்வு செய்து ஆய்வு நடத்துவதே பல ஆண்டுகள் வீணாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பரந்தூர் திட்ட ரத்து ஏகனாபுரம் மற்றும் சுற்றுவட்டார விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை அளித்திருந்தாலும், தொழில் துறையினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. மாற்று இடத்தை அரசு விரைவில் தேர்வு செய்யும் என்று அறிவித்திருந்தாலும், நிலம் கையகப்படுத்துதல் மற்றும் சுற்றுச்சூழல் அனுமதிகள் என அனைத்து நடைமுறைகளையும் தொடங்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
