
சென்னை கிண்டி பல்நோக்கு மருத்துவமனையை வரும் ஜூன் 15-ஆம் தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். ரூ.240 கோடியில் 1,000 படுக்கை வசதியுடன்கூடிய பல்நோக்கு உயா் சிறப்பு மருத்துவமனை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையை சென்ற 5-ஆம் தேதியே குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு திறந்து வைப்பதாக இருந்தது.
எனினும் திட்டமிட்ட தேதியில் குடியரசுத் தலைவா் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டதால் அவரது சென்னை வருகை ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வருகிற ஜூன் 15ம் சென்னை கிண்டி பல்நோக்கு மருத்துவமனையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க இருக்கிறார்.