
சென்னை ஐஐடி வளாகத்தில் கடந்த மார்ச் 31ஆம் தேதி ஆராய்ச்சி மாணவர் சச்சின் குமார் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பேராசிரியர் ஆசிஷ்குமார் சென் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மாணவர்களின் தற்கொலைக்கான காரணம் குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற டிஜிபி திலகவதி தலைமையில் அமைக்கப்பட்ட 5 பேர் கொண்ட குழு விசாரணையில் ஈடுபட்டிருந்தது. இதில், பேராசிரியர் ஆசிஷ்குமார் சென், சச்சின் குமாரை பல மாணவர்கள் முன்னிலையில் அவமானப்படுத்தும் நோக்கில் பேசியதால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.