
மிக் ஜாம் புயலைத் தொடர்ந்து சென்னையை அடுத்த புயல் தாக்கப் போவதாக செய்தி பரவியது. இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்டுள்ள செய்தியில், சென்னையை நோக்கி அடுத்த வாரம் புயல் வரும் என்ற செய்தி அடிப்படை ஆதாரமற்றது. இது போன்ற செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம். டிசம்பர் 10ஆம் தேதி அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகலாம். அது இந்திய கடற்கரையை விட்டு நகர்ந்து சென்று விடும் எனவும் இதனால் சென்னைக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது எனவும் தெரிவித்துள்ளார்.