
சென்னையில் நாளை (07.12.2023) அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. புயல் வெள்ளம் பாதித்த சில பகுதிகளில் நிவாரண பணிகள் நடப்பதால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் டிசம்பர் 4, 5, 6 ஆகிய தினங்களில் ஏற்கனவே விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், நாளையும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.