சென்னை துரைப்பாக்கத்தில் இளம் பெண் ஒருவர் துண்டு துண்டாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது இளம்பெண்ணை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த பின் உடலை சூட்கேசில் வைத்து துரைப்பாக்கம் பகுதியில் போட்டு விட்டு சென்றனர். இது குறித்த தகவலின் பேரில் காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது உயிரிழந்த பெண்ணின் விவரம் தெரிய வந்தது.

அதன்படி மணலியைச் சேர்ந்த வெள்ளையம்மாள் என்ற தீபா தான் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவருக்கு 32 வயது ஆகும் நிலையில் இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த 3 நாட்களுக்கு முன்பாக தீபா காணாமல் போன நிலையில் தற்போது பிணமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த கொலை வழக்கில் தற்போது சிவகங்கையை சேர்ந்த மணிகண்டன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதாவது இவர் சூட்கேஸ் வீசப்பட்ட இடத்திற்கு அருகே வந்தது சிசிடிவி மூலம் தெரிய வந்தது. மேலும் இவரை கைது செய்த காவல்துறையினர் கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்..