சென்னையில் வருகின்ற செப்டம்பர் 16ஆம் தேதி திருப்பதி திருக்குடைகள் ஊர்வலத்தை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி போக்குவரத்து நெரிசலை தவிர்க்க காலை 10 மணி முதல் நிகழ்ச்சி முடிவடையும் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. என்.எஸ்.சி போஸ் சாலை, தங்கச் சாலை, வால்டாக்ஸ் சாலை, பேசியின் பாலம் உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.