பண மோசடி வழக்கு தொடர்பாக தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்க இயக்குனரகம் நீண்ட விசாரணைக்கு பிறகு கைது செய்துள்ளது. அவர் விசாரணைக்கு அழைத்துச் செல்லும் வழியில் நெஞ்சு வலியால் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களுக்கு பிறகு விரைவு அதிரடிப்படையின் குழு நிறுத்தப்பட்டது. இதனிடையே மருத்துவர்களின் அறிக்கை பிறகு அவர் நீதிமன்றத்தில் ஆச்சப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் செந்தில் பாலாஜி ஒன்னும் காந்தி இல்லை, அவர் கைதாவதில் என்ன இருக்கு? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இன்று குமரியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தம்பி செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி என்கிறார்கள். அவர் குணமாகட்டும். கைதின் போது நெஞ்சுவலி என்பதை எல்லாம்  நிறைய தெலுங்கு படத்தில் பார்த்துவிட்டோம். அதிகாரம் என்பது யார் வந்தாலும் அவரவர் வசதிக்குஏற்றது போல  செய்வார்கள். என்னை பிடிக்கவில்லை என்றாலும் நாளை என் வீட்டிலும் சோதனை வரும். இது ஒரு கொடுங்கோன்மை ஆட்சிமுறை. என்ஐஏ மூலம் கூட நான் கைது செய்யப்படலாம் என்று சீமான் பேசியுள்ளார்.