
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கடந்த மூன்று நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஸ்டாலின் மருத்துவமனையில் பரிசோதனை முடிந்த நிலையில் ஓமந்தூரார் மருத்துவமனையில் உள் நோயாளியாக செந்தில் பாலாஜி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கழுத்து மற்றும் மூக்கு வலி இருப்பதாக அவர் மருத்துவர்களிடம் கூறியதாகவும் இதனால் நாளை மீண்டும் அவருக்கு முழு பரிசோதனை நடக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.