தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறைக்கு தற்போது புதிய அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த திமுக ஆட்சியில் செந்தில்பாலாஜி மற்றும் முத்துசாமி ஆகியோர் கவனித்து வந்த இந்த பவர்ஃபுல் துறை, தற்போது முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசில் கிணத்துக்கடவு தொகுதி இளம் எம்எல்ஏ விக்னேஷிடம் அதிரடியாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் நிர்வாகம், மதுபாட்டில்களுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படும் விவகாரம் என ஏகப்பட்ட சர்ச்சைகளும் சவால்களும் நிலவி வரும் இந்த முக்கிய துறையை, இளம் ரத்தமான விக்னேஷ் எப்படி கையாண்டு சமாளிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு கோட்டை வட்டாரத்தில் இப்போதே எகிறத் தொடங்கியுள்ளது.
