முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு இலாகாக்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது அமைச்சர்களின் வயது குறித்த சுவாரசியமான புள்ளிவிவரங்கள் வெளியாகி அரசியல் வட்டாரங்களில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமான அரசியல் கட்சிகளைப் போலல்லாமல், தவெக அமைச்சரவையில் இளைஞர்களுக்கும், நடுத்தர வயதினருக்கும் மிக சமமான அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது இந்த விவரங்களின் மூலம் தெரியவந்துள்ளது.

​மொத்தமுள்ள அமைச்சர்களில் 35 வயதுக்கு உட்பட்ட இளம் ரத்தம் பாய்ந்த அமைச்சர்களாக 6 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், 35 முதல் 45 வயதுக்கு உட்பட்ட துடிப்பான அமைச்சர்கள் 6 பேரும், 45 முதல் 55 வயதுடைய அனுபவமிக்க அமைச்சர்கள் 9 பேரும் தவெக கேபினெட்டில் இடம் பிடித்துள்ளனர். 60 வயதுக்கு உட்பட்ட மூத்த அமைச்சர்களாக 2 பேர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன் மூலம், நிர்வாகத் திறமையும், இளமைப் பட்டாளத்தின் வேகமும் கலந்த ஒரு பக்கா மாஸ் அமைச்சரவையை முதலமைச்சர் விஜய் உருவாக்கியுள்ளார் என்று சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

  • ​35 வயதுக்கு உட்பட்டோர்: 6 பேர்
  • ​35-45 வயதுக்கு உட்பட்டோர்: 6 பேர்
  • ​45-55 வயதுக்கு உட்பட்டோர்: 9 பேர்
  • ​60 வயதுக்கு உட்பட்டோர்: 2 பேர்