சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க முதன்மைச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது கடந்த சட்டமன்றத் தேர்தல் வியூகங்கள் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்துப் பேசிய அவர், “கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் செத்த பாம்பின் மீது அதிக கவனம் செலுத்தி, அதை மட்டுமே அடித்துக் கொண்டே இருந்துவிட்டோம். அதனால்தான் இப்போது கருநாகம் உள்ளே புகுந்துவிட்டது” என்று மிகவும் ஓப்பனாகப் பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
தேர்தல் களத்தில் பிரதான எதிரியாக இருந்த ஒரு கட்சியை மட்டுமே வீழ்த்துவதில் முழுக் கவனத்தையும் செலுத்தியதால், மற்றொரு புதிய அரசியல் சக்தி உள்ளே நுழைந்துவிட்டதைச் சுட்டிக்காட்டும் விதமாகவே ஆர்.எஸ்.பாரதி இவ்வாறு பேசியுள்ளார். அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்கள் முன்னிலையில் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்ட இந்த “செத்த பாம்பு – கருநாகம்” ஒப்பீடு, தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போது காட்டுத்தீயாய் பரவி புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
