தமிழக முதலமைச்சர் விஜய், பெரம்பூர் தொகுதிக்கான பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்துவது தொடர்பாக மாநகராட்சி ஆணையருக்கு அதிரடியாகக் கடிதம் எழுதியுள்ளார்.
மொத்தம் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படவுள்ள இந்தத் திட்டங்களில், சிசிடிவி கேமரா மற்றும் வைஃபை வசதிகளுடன் கூடிய 6 பேருந்து நிறுத்தங்கள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், மேயர் கிருஷ்ணமூர்த்தி நகரில் புதிய விளையாட்டு வளாகம், அம்பேத்கர் கலைக் கல்லூரியில் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் விளையாட்டு வசதி மேம்பாடு மற்றும் நூலகம், கல்வி மையம் அமைத்தல் போன்றவை முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்படவுள்ளன.
சத்தியமூர்த்தி நகரில் 50 லட்சம் ரூபாய் செலவில் டயாலிசிஸ் பிரிவு, எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் தற்காலிகப் பணியாளர் ஓய்வறை மற்றும் அங்கன்வாடிகளுக்குத் தேவையான உபகரணங்கள் வாங்குதல் போன்ற பணிகளுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
தொகுதி மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் வகையில், இந்தத் திட்டங்களை விரைந்து முடிக்க முதலமைச்சர் உத்தரவிட்டிருப்பது, பெரம்பூர் பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
