மேற்கு வங்கத்தின் துர்காப்பூரில், ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் ஒடிசாவைச் சேர்ந்த மாணவி, வெள்ளிக்கிழமை இரவு தனது நண்பருடன் உணவு சாப்பிட சென்றபோது, காட்டுப் பகுதியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். முதலில் இது கூட்டு பாலியல் வன்முறை என்று நினைக்கப்பட்டது, ஆனால் மாணவியின் வாக்குமூலம் மற்றும் மருத்துவ ஆதாரங்களை ஆய்வு செய்தபோது, ஒரு நபரே இந்தக் குற்றத்தை செய்தது உறுதியானது. குற்றவாளிகள் மாணவியின் தொலைபேசியைப் பறித்து, அவரது நண்பரை அழைக்கச் சொன்னார்கள். அவர் வராததால், அவரை காட்டுக்குள் இழுத்துச் சென்று வன்கொடுமை செய்து, கத்தினால் இன்னும் ஆட்களை அழைப்போம் என்று மிரட்டினர்.
காவல்துறை உடனடியாக விசாரணை தொடங்கி, ஞாயிற்றுக்கிழமை ரியாசுதின், அபு பாரூய், ஃபிர்தௌஸ் ஆகிய மூன்று பேரை கைது செய்தது. திங்கள்கிழமை நாசிருதின், சஃபிக்என மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளியான சஃபிக் தப்பியோடியிருந்தார், ஆனால் அவரது சகோதரி ரோசினா, காவல்துறைக்கு உதவி செய்து, ஒரு பாலத்தின் அருகே சந்திப்பு ஏற்பாடு செய்து குற்றவாளியை கைது செய்ய வைத்தார். தற்போது ஐந்து குற்றவாளிகளும் காவலில் உள்ள நிலையில் மாணவியின் நண்பரை விசாரித்து, வலுவான ஆதாரங்களை காவல்துறை சேகரித்து வருகிறது . குற்றம் செய்த தம்பியை அக்காவே போலீசில் பிடித்து கொடுத்த சம்பவம் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
