செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை 6 தாலுகாக்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், திருப்போரூர், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் ஆகிய 6 தாலுகாக்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் மழையால் வெள்ளம் வடியாத நிலையில், 6 தாலுகாவில் மட்டும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மீட்புப்பணி நடப்பதால் ஏற்கெனவே சென்னை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.