நடிகர் சூர்யா இப்போது சிவா இயக்கி வரும் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக திஷா பதானி நடிக்கிறார். பத்துக்கும் அதிகமான கெட்டப்புகளில் சூர்யா நடித்து வரும் இப்படத்தின் சூட்டிங் சென்னையில் நடந்து வருகிறது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் கேஜிஎப் திரைப்படத்தில் வில்லனாக நடித்த அவினாஷ் கங்குவா படத்தில் இணைந்திருக்கிறார். இது தொடர்பான தகவலை அவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் இடம்பெறும் சரித்திரக்கால பகுதியில் அவினாஷ் வில்லனாக நடிப்பதாகவும், அவரது வில்லன் கெட்டப் கேஜிஎப் திரைப்படத்தை விட மிரட்டலாக இருக்கும் எனவும் கங்குவா பட வட்டாரங்களில் கூறுகின்றனர்.