தனுஷ் நடிப்பில் இப்போது உருவாகி வரும் படம் “கேப்டன் மில்லர்”. இப்படத்தின் சூட்டிங் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதையடுத்து தனுஷ் டைரக்டர் சேகர் கம்முலா படத்திலும், இந்தியில் இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கும் படத்திலும் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தனுஷின் 50-வது படத்தை அவரே இயக்கி நடிக்க உள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் “D 50” திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். அதோடு இந்த படத்தின் சூட்டிங் நடப்பு ஆண்டு இறுதிக்குள் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்து அதிகாரப்பூர்வமாக இதுவரை தகவல் வெளிவரவில்லை.  எனினும் இதில் விஷ்ணு விஷால், எஸ் ஜே சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.

மேலும் தனுஷுக்கு ஜோடியாக அமலா பால் நடிக்க போவதாக கூறப்படுகிறது. முன்னதாக இந்த ஜோடி வேலையில்லா பட்டதாரி எனும் சூப்பர்ஹிட் படத்தில் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது. இதற்குரிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்கள்.