டைரக்டர் ஆதித்யா இயக்கத்தில் உருவாகும் “டெவில்” படத்தில் விதார்த், பூர்ணா மற்றும் ஆதித் அருண் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அதோடு மிக முக்கியமான திருப்பு முனை கதாபாத்திரத்தில் டைரக்டர் மிஷ்கின் நடிக்கிறார். இப்படத்தின் வாயிலாக சுபஸ்ரீ ராயகுரு அறிமுகம் ஆகிறார். மாருதி பிலிம்ஸ் தயாரிக்கக்கூடிய இந்த படத்திற்கு கார்த்திக் முத்துகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். இந்நிலையில்  டைரக்டர் மிஷ்கின் முதல் முறையாக “டெவில்” படத்தின் வாயிலாக இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.

அதன்படி மிஷ்கின் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் முதல் பாடலான “கலவி” பாடலை படக்குழு நாளை மாலை 5 மணிக்கு வெளியிடவுள்ளது. இதுகுறித்த மேக்கிங் புரொமோ வீடியோவை படக்குழு வெளியிட்டு உள்ளது. இதை ரசிகர்கள் பலரும் முதல் பாடலே இப்படியா? என கமெண்ட் செய்து வருகின்றனர்.