45-60 வயது வரை உள்ள திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஓய்வூதியம் வழங்க ஹரியானா அரசு முடிவெடுத்துள்ளது.  இதுகுறித்து வெளியான அறிக்கையில், ஆண்டு வருமானம் ரூ.1.80 லட்சம் உள்ளவர்களுக்கு இந்த ஓய்வூதியம் கிடைக்கும். இது ஹரியானாவைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

60 வயதான திருமணமாகாத பெண் ஒருவர் அம்மாநில முதல்வரிடம் ஓய்வூதியம் கோரி விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில் அப்பெண் விண்ணப்பித்த ஒரு மாதத்தில் முதல்வர் மனோகர் லால் கட்டார் இத்திட்டத்தை அறிவித்துள்ளார். இது அம்மாநில மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.