கரீபியன் அதிரடி மன்னன் ரோவ்மன் பவல் 2026 டி20 உலகக்கோப்பையில் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முக்கியமான ஆட்டத்திற்கு முன்னதாக, பவல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு சுவாரஸ்யமான ரீல் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

மேலும் அதில் “சுழற்றி அடிப்போம்” என்று சரளமான பேசி எதிரணிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐபிஎல் தொடர்களில் விளையாடிய அனுபவம் அவருக்கு ஹிந்தி மொழியை இவ்வளவு அழகாகக் கற்றுக்கொடுத்துள்ளது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Saurav Haldar (@sauravhaldar_)

“>

இந்த வைரல் வீடியோ கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. குறிப்பாக தென்னாப்பிரிக்காவுடனான மோதலுக்கு முன்பாக, மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் இவ்வளவு தன்னம்பிக்கையுடன் பேசியிருப்பது அந்த அணியின் ஆக்ரோஷமான மனநிலையை காட்டுகிறது.

இந்நிலையில் பவலின் இந்த ஹிந்திப் பேச்சைக் கண்ட இந்திய ரசிகர்கள், “அவர் பார்ப்பதற்கு கரீபியன் வீரர் போல இருந்தாலும், மனதளவில் இந்தியராக மாறிவிட்டார்” எனப் பாராட்டி வருகின்றனர். களத்தில் பந்துகளைச் சிதறடிக்கும் பவல், தற்போது தனது பேச்சின் மூலமும் இணையத்தை அதிர வைத்துள்ளார்.