
சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற சஃபாரி வாகனத்தை யானை ஒன்று பலமுறை தூக்கி வீசிய வீடியோ வைரலாகி வருகிறது. தென்னாப்பிரிக்காவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சில சுற்றுலா பயணிகள் தேசிய பூங்காவிற்கு சென்றனர். சுமார் 22 பேர் சஃபாரி வாகனத்தில் ஏறி பூங்காவை சுற்றி பார்த்தனர். அப்போது அந்த வாகனத்தை ஒரு யானை தடுத்து நிறுத்தியது.
Giant elephant vs a safari vehicle in South Africa pic.twitter.com/2onzFajYos
— Githii (@githii) March 19, 2024
தன்னுடைய தந்தங்களால் வாகனத்தை காற்றில் பலமுறை தூக்கி போட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். நடுங்கிப்போன அவர்கள் தங்களுடைய உயிரை காப்பாற்றிக் கொள்வதற்கு ஒளிந்து கொண்டனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்த வாகனம் கவிழவில்லை. தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
An elephant attacks a tourist truck in South Africa 🇿🇦 pic.twitter.com/BX8typkcUq
— Africa In Focus (@AfricaInFocus_) March 19, 2024