சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்தவர் நூர் முகமது இஸ்மாயில்(22). கடந்த பிப்ரவரி மாதம் 13-ஆம் தேதி இஸ்மாயில் தனது உறவினரான முகம்மது தாரிக்(26) என்பவருடன் மலேசியாவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இஸ்மாயிலின் சகோதரரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர் நாங்கள் இஸ்மாயிலையும் முகமது தாரிக்கையும் கடத்தி விட்டோம். அவர்களை விடுவிக்க வேண்டும் என்றால் 26 லட்ச ரூபாய் கொடுக்க வேண்டும்.

பணத்தை தராவிட்டால் அவர்களது உடலில் உள்ள கிட்னி, கல்லீரல் உள்ளிட்ட பாகங்களை அறுவை சிகிச்சை மூலம் எடுத்து விற்பனை செய்து விடுவோம் என மிரட்டி உள்ளனர்.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித்தை நேரில் சந்தித்து இருவரையும் மீட்டு தர கோரி மனு அளித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.