வேலூர் மாவட்டத்தில் ஏலகிரி சுற்றுலா சென்ற இளம் பெண் ஒருவர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலிருந்து ஏலகிரிக்கு கல்லூரி மாணவர்கள் சுற்றுலா சென்று இருந்த நிலையில் வேலூர் விமான நிலையம் அருகே அவர்கள் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்தக் கோர விபத்தில் கல்லூரி மாணவி அஸ்வதி (21) பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் மாணவி சக்தி மற்றும் மாணவர் டிராவிட் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.