
விஜய் டிவியில் நீயா நானா நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிகழ்ச்சியை ஆரம்பத்தில் இருந்து கோபிநாத் தொகுத்து வழங்கி வரும் நிலையில் ஒவ்வொரு வாரமும் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்த நிலையில் இந்த வாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரோமோ காட்சி வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது இந்த வாரம் பேய் தலைப்பு கொண்டு விவாதம் நடைபெற்று உள்ளது.
பேய் இருப்பதை நம்பும் மனிதர்கள், பேய் நம்பிக்கை இல்லாதவர்கள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்று உள்ளது. அப்போது நபர் ஒருவர் கையில் மணியை கொடுத்துவிட்டு இறந்தவரை அழைக்கின்றார். இறந்தவர் அரங்கத்திற்குள் வந்தபோது மணி தானாக சத்தமிடுவதை பார்க்க முடிகின்றது. ஆனால் இந்த சம்பவத்தை செய்தது பேய் இல்லை என்று கூறிய நபர் பேய் இருப்பதாக கூறி நபரிடம் செய்து பீதியை காட்டியுள்ளார். அதேசமயம் அந்த மணி ஆனது கோபிநாத் கூட ஜான் என்ற பெயரை அழைத்த போது தொடர்ந்து ஒளித்துக்கொண்டிருக்கிறது. தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.