முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சத்யராஜ் அவர்கள், எனக்கு முன்பாக பேசிய ஒருவர் பராசக்தி வசனம் பேசினார் அப்போது எனக்கு ஒன்று நினைவில் வந்தது, நாக்கில் சுழற்சி வேண்டுமென்றால் அது கலைஞரின் வசனம் பேசினால் மட்டும்தான் வரும்.

தமிழில் சில எழுத்துக்களை பேச நாக்கின் சுழற்சி அவசியம். மனப்பயிற்சியும் நா சுழற்சியும் வரவேண்டும் என்றால் கலைஞரின் வசனத்தை பேச வேண்டும். ல ள ழ இவையெல்லாம் தெளிவா வரணும்னா கலைஞருடைய வசனம் பேசினால் தான் வரும் என கூறியது இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது.