சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். “ஜனநாயகம் நிறைந்த தேசத்தை கட்டியெழுப்ப நாம் அனைவரும் உறுதி ஏற்போம்.
ஒவ்வொரு குடிமகனின் வாக்கும் மதிப்புக் கொள்ளப்படும், பன்மைதான் எங்கள் வலிமை எனும் உண்மையை உறுதிப்படுத்துவோம்” என அவர் கூறினார். மேலும், 79-வது சுதந்திர தின விழாவில் மக்களை நோக்கி உரையாற்றிய அவர், மதவெறி நிராகரிப்பு, பாகுபாட்டை முற்றிலும் ஒழித்தல் மற்றும் சமூகத்தின் ஒவ்வொருவரையும் பாதுகாப்பதே உண்மையான சுதந்திரம் என வலியுறுத்தினார்.
#IndependenceDay wishes to all my fellow citizens. On this day, let us strengthen our resolve to build a nation where democracy cannot be stolen, where every citizen’s vote counts, and where diversity is cherished as our greatest strength.
True freedom means rejecting bigotry,… pic.twitter.com/XsCbaw55RC
— M.K.Stalin (@mkstalin) August 15, 2025
“>
அத்துடன், “எங்கள் சுதந்திர போராட்ட வீரர்கள் கனவுகண்ட தேசம் என்பது ஒவ்வொருவரும் சமத்துவம், கண்ணியம், மரியாதை உடன் வாழும் தேசமாகும். அதனை பாதுகாப்பதும், வலுப்படுத்துவதும் எங்கள் கடமை. ஆகவே, ஜனநாயகத்தை பறிக்க முடியாத தேசத்தை கட்டியெழுப்புவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் தனது சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்.
