இந்தியாவுக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை அடுத்து, அந்த விமானியைக் கைதுசெய்துள்ளததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜஸ்தானில் உள்ள ஜெய்சால்மர் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டபின், அந்த விமானி பாராசூட் மூலம் வெளியே குதித்து உயிர் தப்பினார். பின்னர், இந்திய பாதுகாப்புப் படையினர் அவரை துரிதமாக கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் விமானியின் பெயர் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. தற்சமயம் அவர் இந்திய பாதுகாப்பு அமைப்புகளின் பராமரிப்பில் வைக்கப்பட்டுள்ளார். இந்திய எல்லைகளை மீறிய பாகிஸ்தானின் இந்த முயற்சி மேலும் பதற்றத்தை ஏற்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா, அத்துமீறலுக்கு எப்போதும் பதிலடி அளிக்கத் தயார் என்பதை மீண்டும் ஒருமுறை இந்தச் சம்பவம் நிரூபித்துள்ளது.