உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள புலந்த்சாகர் மாவட்டத்தில் கைலாவன் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் அமைந்துள்ள சுடுகாட்டில் பாஜக கட்சியின் நிர்வாகி ஒருவர் திருமணமான இளம் பெண்ணுடன் காரில் உல்லாசமாக இருந்தார். அவரின் பெயர் ராகுல் வால்மீகி. இவர் பாஜகவின் பட்டியலணி மாவட்ட செயலாளராக இருக்கிறார். இவர்கள் இருவரும் சுடுகாட்டில் காரில் அரை நிர்வாண கோலத்தில் உல்லாசமாக இருந்த நிலையில் கிராம மக்கள் அவர்களை கையும் களவுமாக பிடித்து அதனை செல்போனில் வீடியோவாகவும் எடுத்தனர். அந்தப் பெண் தன்னுடைய முகத்தை துப்பட்டாவால் மூடிக்கொண்ட நிலையில் ராகுல் தன்னை விட்டு விடும்படி கையெடுத்து கும்பிட்டு அங்கிருந்து தப்பி ஓட முயன்றார்.

 

அவருக்கு கெஞ்சியதையும் சேர்த்து மக்கள் வீடியோ எடுத்து விட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானதால் அவரை பாஜக மேலிடம் கட்சியிலிருந்து நீக்கியுள்ளனர். இது தொடர்பாக முறையாக புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்போம் என காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் முன்னதாக மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக முன்னாள் மனோகர்லால் தாக்கர் என்பவர் நடு ரோட்டில் ஒரு பெண்ணுடன் உல்லாசமாக இருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.