மும்பை நகரில் நடந்த அசாதாரண சம்பவம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. லேம்போர்கினி என்ற உலகப் புகழ்பெற்ற கம்பீர கார் ஒன்று சாலையில் செல்லும் போது, ஒரு தெருநாய் அந்த காரின் வழியை தடை செய்தது.
மற்ற வாகனங்கள் செல்ல அனுமதித்த அந்த நாய், அந்த லேம்போர்கினிக்கே எதிர்ப்பு தெரிவித்தது போல், அதன் முன்னே நின்று தடுக்கவே காரை ஓட்டிய நபர் குழம்பிய நிலையிலே முடிவெடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
@gharkekalesh pic.twitter.com/8imurqJrFH
— Arhant Shelby (@Arhantt_pvt) July 15, 2025
பலமுறை பாதையை மாற்றியும் பயனில்லை. அந்த நாய் மீண்டும் மீண்டும் வழியை மறித்துக் கொண்டே இருந்தது. இறுதியில், காரை சற்று வேறுபட்ட கோணத்தில் ஓட்டி, அந்த நாயின் இடத்தை தவிர்த்து சென்ற பிறகு கூட, அந்த நாய் சிறிது தூரம் வரை காரை துரத்தி ஓடியது.
இந்த வீடியோவை car.__.enthusiastt என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் பகிர்ந்ததுடன், “MUMBAI’s FAMOUS DOG BULLING WITH V10” என பதிவிட்டு இருந்தனர். தற்போது இந்த வீடியோ வைரலாகி நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பலரும் “இந்த நாய்க்கு லேம்போர்கினி V10 பிடிக்கவில்ல போல” என நகைச்சுவையுடன் கருத்து தெரிவித்துள்ளனர்.
