தமிழக முதலமைச்சர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதிக்கு மேற்கொண்டுள்ள பயணத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற விழாவில், முக்கிய அமைச்சர்கள் பலரும் கலந்துகொண்டனர். இவ்விழாவில் கலந்துகொண்டு பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், “தேர்தல் பிரசாரங்களின்போது, இந்தச் ‘சின்ன பசங்க’ யார் என்று நிரூபிப்பார்கள் எனக் குறிப்பிட்டிருந்தேன். அதனை இன்று மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன்” என்று பேசினார்.

மேலும் அவர் பேசுகையில், தற்போதைய புதிய அரசின் செயல்பாடுகள் மூலம், எதிர்காலத்தில் தமிழகத்தில் எதிர்க்கட்சியே இல்லாத ஒரு மாபெரும் சட்டமன்றத்தை இந்தச் ‘சின்ன பசங்க’ அமைப்பார்கள் என்று மிக உறுதியுடன் கூறிக்கொள்வதாக அதிரடியாகத் தெரிவித்தார்.

அதாவது சின்ன பசங்கன்னு ஏளனமா பாக்காதீங்க… இந்த சின்ன பசங்க இனிவரும் காலத்தில் எதிர்க்கட்சி இல்லாத சட்டசபையை உருவாக்கி எங்க அண்ணனை முதலமைச்சர் ஆக அரியணையில் அமர வைப்போம் என்றார். மேலும் இதற்கு முன்னதாகவும் யார் சின்ன பசங்க என்று அமைச்சர் ரமேஷ் மிகவும் ஆவேசமாக தேர்தலுக்கு முன்பாகவே பேசி இருந்த நிலையில் தற்போதும் தான் பேசியது சரி என்று நிரூபிக்கும் வகையில் பேசியது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.