
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக பாம்புகள் குறித்த வீடியோக்கள் அதிகளவு பகிரப்பட்டு வருகின்றன. பொதுவாகவே பாம்புகள் என்றால் அனைவருக்கும் பயம் இருக்கும். அதனைப் பார்க்கும் ஆர்வம் மனிதர்கள் மத்தியில் எப்போதும் அதிகமாகவே இருக்கும். பாம்புகள் இணையத்தின் ஹீரோக்கள் என்று சொல்லும் அளவுக்கு இணையத்தில் பாம்புகள் தொடர்பான வீடியோக்கள் அதிகளவு வைரலாகி வருகிறது. மனிதர்களை அதிக அளவில் கவர்ந்த உயிரினங்களின் பட்டியலில் எப்போதும் பாம்புகளுக்கு முக்கிய இடம் உள்ளது. பாம்புகள் பற்றிய திரைப்படங்கள் மற்றும் சீரியல்கள் என ஏராளமாக காணப்படுகின்றன.
தற்போது வெளியாக்கியுள்ள வீடியோவில் ராட்சத மலைப்பாம்பு ஒன்று மான் ஒன்றினை நன்றாக சுற்றியுள்ளது. பாம்பின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாமல் தவித்த மானை கடைசி நேரத்தில் நபர் ஒருவர் தன்னுடைய சாமர்த்தியத்தால் காப்பாற்றியுள்ளார். சிறிய கம்பு ஒன்றை வைத்துக்கொண்டு பாம்பை குறித்த நபர் சீண்டிய போது அது தன்னுடைய பிடியை சற்று விட்ட நிலையில் மான் தப்பி சென்றது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
You are driving and you see this, would you intervene or let the circle of life continue? pic.twitter.com/VTYlu18VUA
— Nature is Amazing ☘️ (@AMAZlNGNATURE) July 20, 2024