சீரியல் நடிகர்கள் அர்னவ்-திவ்யா பற்றி சென்ற சில மாதங்களாகவே பல விஷயங்கள் பரவலாக பேசப்பட்டு வருகிறது. திருமணம் செய்தார்கள், திவ்யா கர்ப்பமானார், எனினும் அர்னவ் தன்னை வயிற்றில் உதைத்துவிட்டார் என போலீஸில் புகாரளித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அண்மையில் திவ்யாவிற்கு குழந்தையும் பிறந்தது.
இந்நிலையில் திவ்யா வீட்டிற்கு பவுன்சர்கள் மற்றும் வழக்கறிஞருடன் சென்றுள்ளார் அர்னவ். இருப்பினும் கதவை திறக்காமல் திவ்யா இங்கே எதற்கு வந்தீர்கள். உங்களுக்கு இந்த வீட்டிற்குள் வருவதற்கு எந்த உரிமையும் இல்லை. போலீஸை அழைத்திருக்கிறேன். அவர்களிடம் பேசிக்கொள்ளுங்கள் என திவ்யா கூறியுள்ளார்..
