இயக்குநர் சீனு ராமசாமி படத்தில் தான் ஒருபோதும் நடிக்க மாட்டேன் என்று நடிகை மனிஷா யாதவ் அறிவித்துள்ளார். நடிகை மனிஷாவுக்கு இயக்குனர் சீனு ராமசாமி பாலியல் தொல்லை கொடுத்ததாக சர்ச்சை கிளம்பிய நிலையில், நடிகை மனிஷா தனது இன்ஸ்டா பக்கத்தில், “சீனு ராமசாமி படத்தில் நான் ஒருபோதும் நடக்க மாட்டேன்.

‘ஒரு குப்பை கதை’ பட ஆடியோ வெளியீட்டு விழாவில், மேடை நாகரிகத்திற்காகத் தான் எல்லோருக்கும் நன்றி சொன்னேன். 9 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததை நான் மறக்கவில்லை. சீனு ராமசாமி, பொய் பேசாமல் உண்மைகளைக் கூறுங்கள்” என்று பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.