மத்தியஅரசு மூத்த குடிமக்களுக்காக பல நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் தற்போது வெளியான ‘அடல் வியோ அபி யோதய யோஜனா’ திட்டம் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. இந்த திட்டம் மூத்த குடிமக்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கும், பாதுகாப்பாக இருப்பதற்கும், வயதான காலத்தில் அவர்களுக்கு பொருளாதார வகையில் உதவுவதற்கும், ஏற்றவாறு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் 60 வயது மேற்பட்டவர்களுக்காக தொடங்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து இந்த திட்டம் உணவு, சுகாதாரம், பொழுதுபோக்கு மற்றும் சமூக சேவைகள் ஆகியவற்றை அளித்து வருகிறது. ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 23ஆம் தேதி இந்த திட்டத்திற்கான பட்ஜெட் தாக்கல் செய்துள்ள நிலையில். இதற்காக ரூ 279 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள முதியோர் இல்லங்கள், அனைத்து மாநில தலைநகரங்களில் உள்ள முதியோர் சிகிச்சைக்கான பராமரிப்பு மையங்கள் ஆகியவை இந்தத் திட்டத்தின் மூலம் நிறுவப்படும். இதைத்தொடர்ந்து தேசிய ஹெல்ப்லைன் ஒன்றும் இந்த திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது.இதில் விண்ணப்பதாரர் குடிமகனாக இருக்க வேண்டும் என்றும், அவரது வயது 60 அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க பிரத்யேக போர்டல் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஆதார் அட்டை, வருமான வரி மற்றும் முதன்மை முகவரி சான்றிதழ், சுகாதார தகவல் ஆவணங்கள் போன்றவற்றை வைத்து விண்ணப்பித்துக் கொள்ளலாம். இந்தத் திட்டம் விரைவில் அமலுக்கு வரும் என்பது அரசினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.