சமீபத்தில் லட்சத்தீவுக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி அவர்கள் அந்த தீவின் சுற்றுலா துறையை மேம்படுத்துவதற்காக அழகான கடற்கரை பகுதிகளில் வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்து அவரது சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

இது சுற்றுலாத் துறையை மட்டுமே நம்பி இருக்கும் மாலத்தீவு அரசுக்கு அதிர்ச்சி அளித்தது. இதனால் பிரதமர் மோடிக்கு எதிராகவும் இந்தியாவுக்கு எதிராகவும் மாலத்தீவு அமைச்சர்கள் அவதூறாக விமர்சனங்களை வைத்தனர்.

இதற்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் மாலத்தீவு அமைச்சர்கள் மூன்று பேர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதனிடையே இந்தியாவில் இருந்து மாலத்தீவுக்கு செல்வதற்காக முன்பதிவு செய்யப்பட்ட விமான டிக்கெட்டுகளை பயணிகள் ரத்து செய்துள்ளனர்.

அதேபோன்று மாலத்தீவு விடுதிகளில் தங்குவதற்கு செய்யப்பட்ட முன்பதிவுகளிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன. சுற்றுலாத் துறையை நம்பி இருக்கும் மாலத்தீவுக்கு இந்தியர்களின் இந்த முடிவு பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மாலத்தீவு அதிபராக முஹம்மது மைசூர் ஐந்து நாள் பயணமாக சீனாவுக்கு சென்றிருந்தார்.

அங்கு வர்த்தக மன்ற மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய முகமது முய்சு கூறுகையில் “எங்களது நெருங்கிய கூட்டாளிகளில் ஒன்று சீனா. கொரோனா பாதிப்புக்கு பிறகு எங்களது சுற்றுலா துறையின் முதன்மை சந்தையாக விளங்குவது சீனா.

சுற்றுலா வரும் பயணிகளில் முதலிடத்தை வகிப்பதும் சீனா. இந்த நிலை தொடர வேண்டும். அதற்காக எங்கள் நாட்டிற்கு அதிக சுற்றுலா பயணிகளை சீனா அனுப்பி வைக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.