அமெரிக்காவின் ஜியார்ஜியா மாகாணத்தை சேர்ந்த 75 வயது முதியவர் ஒருவர் சிப்ஸ் பாக்கெட் ஒன்றை சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடி சாப்பிட முயன்றார். சிப்ஸ் பாக்கெட்டை கைகளால் பிரிக்க முயற்சித்தவர் முடியாததால் சிகரெட் பத்த வைக்கும் லைட்டரை பயன்படுத்தி சிப்ஸ் பாக்கெட்டை கொழுத்த முயற்சித்துள்ளார்.

அப்போது தவறுதலாக அவர் மீது தீ பிடித்து கொழுந்து விட்டு எறிய துவங்கியுள்ளது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததோடு அவர்களாகவே தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதையடு்த்து சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவக் குழு முதியவரை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.