உலகின் மிகப் பரபரப்பான கடல் பாதைகளில் ஒன்றான தென் சீனக் கடலில், மொத்த உலக வர்த்தகத்தின் 60% க்கும் மேற்பட்ட பொருட்கள் கடத்தப்படுகின்றன. இந்த கடலில் உள்ள ஸ்கார்பாரோ ஷோல் பகுதியில், திங்களன்று பிலிப்பைன்ஸ் ரோந்துப் படகைத் துரத்தும் பணியில் இருந்த சீன கடற்படை மற்றும் சீன கடலோர காவல்படை கப்பல்கள் மோதியதால் பெரும் விபத்து ஏற்பட்டது.
விபத்தில் கப்பல்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டதுடன், சீனாவுக்கு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகளை பிலிப்பைன்ஸ் கடலோர காவல்படை வெளியிட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக இரு தரப்பிலும் பதற்றம் நிலவுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
🇨🇳🇵🇭 Photos show the damage sustained by China Coast Guard vessel 3104 after a collision with the PLA-Navy Type 052D destroyer Guilin (164). The incident occurred this morning https://t.co/OaPZNUHaa0 pic.twitter.com/U8hwchkaNx
— OsintWorld 🍁 (@OsiOsint1) August 11, 2025
“>
