சீன நாட்டின் மத்திய பகுதியில் உள்ள ஹெனான் மாகாணத்தில் நிலக்கரி சுரங்கம் ஒன்று அமைந்துள்ளது. இந்த சுரங்கத்தில் 425 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று நிலக்கரி மற்றும் எரிவாயு வெடித்ததால் இந்த சுரங்கத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது.

தொழிலாளர்களில் 350 பேர் சுரங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் மீதமுள்ள 45 பேரில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 8 பேர் காணாமல் போனதாகவும் அவர்களை தேடும் பணி தொடர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.