சமூக வலைதளங்களில் தற்போது சீனச் சிறுமி ஒருவற்கும், பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் சுற்றுலாப் பயணிகளுக்கும் இடையே நடந்த உரையாடல் குறித்த வீடியோ ஒன்று தீயாய் பரவி வருகிறது. சீனாவிற்குச் சுற்றுலா சென்ற மூன்று பாகிஸ்தான் பெண்கள், அங்கு தெருவில் நின்றுகொண்டிருந்த ஒரு அழகான சிறுமியைக் கண்டு மகிழ்ச்சியடைந்து அவளிடம் பேசத் தொடங்கினர். அப்போது தங்களை அறிமுகப்படுத்திக் கொண்ட அவர்கள், “நாங்கள் பாகிஸ்தானில் இருந்து வருகிறோம்.

அந்தச் சிறுமி ஆம் என்று கூறுவாள் என அவர்கள் எதிர்பார்த்த நிலையில், அச்சிறுமி மிகவும் மழலை மாறாத குரலில் “எனக்கு பாகிஸ்தானைப் பற்றித் தெரியாது” என்று பளிச்சென்று பதிலளித்தார். சர்வதேச அளவில் இரு நாடுகளும் தங்களின் நட்புறவைப் பற்றிப் பேசினாலும், ஒரு சிறுமி இவ்வாறு கூறியது அந்தப் பெண்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் தர்மசங்கடத்தையும் ஏற்படுத்தியது.

 

View this post on Instagram

 

A post shared by Darcy Phong/達西·馮 (@englishwithdarcy)

“>

இந்த வீடியோவின் சுவாரஸ்யம் இத்துடன் முடிவடையவில்லை. அந்தப் பெண்கள் சூழ்நிலையைச் சமாளிக்க முயன்றபோது, சிறுமி மேலும் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். “நீங்கள் மூவரும் மிகவும் சத்தமாகப் பேசுகிறீர்கள், கொஞ்சம் மெதுவாகப் பேசக் கூடாதா?” என்று அந்தப் பெண்களுக்கு அறிவுரை வழங்கினார். சிறுமியின் இந்த மழலை கலந்த நேர்மையான பதிலைக் கேட்டு அந்தப் பெண்களின் முகம் சுருங்கிய போதிலும், சிரிப்போடு கடந்து சென்றனர்.

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோ நெட்டிசன்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பலர் இதனை ‘பாகிஸ்தானுக்கு கிடைத்த சர்வதேச அவமானம்’ என்றும், சிறுமியின் நிறைந்த பதிலடி என்றும் சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துக்களைப் பகிர்ந்து இந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.