அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்துக்கு, மர்ம நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். வாட்ஸ் அப் காலில் அழைத்த மர்ம நபர், சிவி சண்முகத்தை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு எங்கள் கிராமத்துக்கு வந்தால் கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்து விட்டு இணைப்பை துண்டித்து விட்டார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.