வாக்காளர்கள் தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டையை இசிஐ இணையதளத்தில் இருந்து நொடிகளில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என மத்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த அட்டை மூலம் வாக்களிக்கும் உரிமையை பயன்படுத்திக்கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு படிவம்-8ஐப் பயன்படுத்த வேண்டும், அதில் மொபைல் எண்ணை உள்ளிட தனி நெடுவரிசை கிடைக்கப்பெறும்.

இந்த வாக்காளர் அடையாள அட்டைக்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்து, இணையதளத்தில் உள்ள e-epic என்ற பிரிவில் வாக்காளர் அடையாள எண், ஓடிபி-யை உள்ளிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு இந்த இணையதளத்தை மட்டும் பயன்படுத்தவும். https://voters.eci.gov.in/