பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் கேன்ட் ரயில் நிலையத்தில், சில்லறை விவகாரம் தொடர்பாகப் பெண் ஊழியர் ஒருவருக்கும் பயணியுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.
அந்தப் பயணி டிக்கெட் எடுப்பதற்காகப் பணம் கொடுத்தபோது, தன்னிடம் மீதி கொடுக்கச் சில்லறை இல்லை என்றும், சரியான தொகையைக் கொடுத்தால் மட்டுமே டிக்கெட் தருவேன் என்றும் அந்தப் பெண் கிளர்க் பிடிவாதமாக மறுத்துள்ளார்.
Extremely poor behavior by the female ticket staff at Jalandhar Railway Station! They didn’t return the change money, instead threatened to call the RPF, and then didn’t even give the ticket. This is straight-up a robbery-like atmosphere.
pic.twitter.com/bEaSKlThF7— Ghar Ke Kalesh (@gharkekalesh) March 13, 2026
இதனால் ஆத்திரமடைந்த பயணி, “சில்லறை இல்லை என்பதற்காக டிக்கெட் தரமாட்டேன் என்று எப்படிச் சொல்லலாம்?” எனக் கேள்வி எழுப்ப, இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் வெடித்தது.
இந்தச் சம்பவத்தை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து இணையத்தில் பகிர, அது வைரலானது. இதைப் பார்த்த ரயில்வே நிர்வாகம், பயணிகளிடம் கனிவாக நடக்காமல் அலட்சியமாகச் செயல்பட்ட அந்தப் பெண் ஊழியர் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிரடியாக அறிவித்துள்ளது.
