மகாராஷ்டிராவில் பெற்ற தாயே தனது ஐந்து மாத பச்சிளம் குழந்தையை கல்லை வைத்துத் தலையில் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

குழந்தையைக் கொலை செய்த பின்னர், யாருக்கும் தெரியாமல் அதன் உடலைத் தனது வீட்டுச் சமையலறையில் ரகசியமாக ஒளித்து வைத்துள்ளார்.

அந்தத் தாய். நீண்ட நேரமாகத் தன் குழந்தையைக் காணவில்லை என அந்தப் பெண்ணின் கணவர் தேடியபோதுதான், சமையலறையில் குழந்தை சடலமாக மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இந்தக் கொடூரச் செயலுக்கான காரணம் குறித்துக் காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது, அந்தப் பெண்ணுக்கு மனநல பாதிப்பு இருந்திருக்கலாம் அல்லது குடும்பத் தகராறு காரணமாக இப்படிச் செய்திருக்கலாம் என அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. தாயே எமனாக மாறிய இந்தச் சம்பவம் அந்தப் பகுதி மக்களை நிலைகுலைய வைத்துள்ளது.