
இந்தியாவில் மக்கள் பலரும் தற்போது சிலிண்டர் பயன்படுத்த தொடங்கி விட்டனர். அப்படி சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு அரசு 50 லட்சம் ரூபாய் வரை காப்பீடு வழங்குகின்றது. இந்த காப்பீடு தொகை பெறுவதற்கு என்னென்ன தகுதிகள் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். அதாவது சமையல் சிலிண்டர் விலை விபத்து ஏற்பட்டால் 50 லட்சம் ரூபாய் காப்பீடு வழங்கப்படும். இந்த தொகையை பெறுவதற்கு கூடுதலாக எந்த வித ப்ரீமியம் கட்டணத்தையும் செலுத்த வேண்டாம்.
சிலிண்டரை முன்பதிவு செய்யும்போதே உங்களுக்கான காப்பீடு தொகை உறுதி செய்யப்படும். சிலிண்டர் வடித்து ஒருவேளை தீக்காயம் ஏற்பட்டால் பெட்ரோலிய நிறுவனங்களிடமிருந்து 50 லட்சம் ரூபாய் வரை காப்பீடு வழங்கப்படும். அதாவது சிலிண்டர் வெடித்து சொத்து சேதம் ஏற்பட்டால் தனிநபருக்கு 2 லட்சம் ரூபாயும், மரணம் ஏற்பட்டால் ஆறு லட்சமும், மருத்துவ சிகிச்சைக்கு 30 லட்சமும் வழங்கப்படும். அதே சமயம் காவல்துறையின் புகார், மருத்துவ செலவுகள், பிரேத பரிசோதனை மற்றும் இறப்புச் சான்றுகளின் நகல் ஆகிய விவரங்கள் அடிப்படையில் இந்த காப்பீட்டுத் தொகை உங்களுக்கு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.