நைனிடாலில் 9-ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் தனது நண்பனின் அண்ணியால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதுடன், அவரிடம் 10 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டப்பட்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தனது நண்பனின் குடும்பத்தினருடன் சுற்றுலா செல்வதாக எண்ணிச் சென்ற அந்த மாணவனை, அவரது நண்பனின் அண்ணி தந்திரமாக நைனிடாலுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
மேலும் அங்கு ஒரு விடுதியில் தங்கியிருந்தபோது, அந்தப் பெண் மாணவனுக்கு மயக்க மருந்து கலந்த பானத்தைக் கொடுத்து, அவர் சுயநினைவற்ற நிலையில் இருந்தபோது பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியுள்ளார். மேலும், அந்த அருவருக்கத்தக்கச் செயல்களை ரகசியமாக வீடியோவும் எடுத்துள்ளார்.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, அந்தப் பெண் எடுத்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாகக் கூறி, மாணவனைத் தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார். இந்த ரகசியத்தை மறைக்க 10 லட்சம் ரூபாய் தர வேண்டும் என்று அவர் கட்டாயப்படுத்தியதால், மனமுடைந்த மாணவன் தனது பெற்றோரிடம் உண்மையைக்கூறினார்.
இதனைத் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாகக் காவல்துறையில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், அந்தப் பெண்ணைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு சிறுவனை நம்ப வைத்து இத்தகைய கொடூரச் செயலில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
