டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறுவன் ஒருவர் அதிகப்படியான காய்ச்சல் மற்றும் இருமும் போது ரத்தம் வருவது போன்ற பிரச்சனையுடன் அனுமதிக்கப்பட்டார். சிறுவனுக்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிறுவனின் இடது பக்க நுரையீரலில் துணி தைக்கும் ஊசி இருந்துள்ளது. ஊசி எப்படி சிறுவனின் நுரையீரலுக்குள் சென்றது என்பது பற்றி இதுவரை தெரியவில்லை.

அறுவை சிகிச்சை மூலம் ஊசியை எடுக்க முயற்சித்தாலும் நுரையீரலில் ஆழத்தில் ஊசி இருந்ததால் அது மருத்துவர்களுக்கு சவாலாக இருந்துள்ளது. இதனால் ஒரு முடிவு எடுத்த மருத்துவர்கள் காந்தத்தின் உதவியுடன் சிறுவனின் நுரையீரலில் சிக்கி இருந்த ஊசியை வெளியில் எடுத்துள்ளனர்.